Tuesday 22 February 2011

பவளமல்லி ..


வானத்துக்கும் பூமிக்குமாய் கொசுவலை விரித்ததுபோல் மெல்லிய பனி பரவி நின்றது.  மேலாக ஒரு ஷாலைப்போர்த்திக்கொண்டு விடிகாலை இளங்குளிரை அனுபவித்தபடி மெதுநடை போட்டுக்கொண்டிருந்தவள்,.. அதை ரசித்தபடியே கட்டிடத்தின் பின்பக்கம் வந்தாள்..

கம்மென்று காற்றில் மிதந்து வந்து மோதிய பவளமல்லியின் வாசத்தை, முழுவதும் உள்வாங்கிக்கொள்வதுபோல் ஒரு நீண்டமூச்சை இழுத்து,  அப்படியே ஒரு நிமிடம் அதை அனுபவித்தபடி கண்மூடி நின்று கொண்டிருந்தாள்.. சிவப்பும் வெள்ளையுமான பூக்களை கையில் வைத்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தபோதுதான்,  'இங்கேதான் இருக்கியா..'  பின்பக்கமிருந்து ஒரு பெண்குரல் கேட்டது.

சட்டென விழித்துக்கொண்டவளுக்கு, தன்னுடைய வீட்டில் படுக்கையறையில் படுத்திருப்பது உறைக்க முழுசாக இரண்டு நிமிடங்கள் ஆனது. இருட்டில் துழாவி, பக்கத்து டேபிளிலிருந்த அலாரத்தை எடுத்து, அதன் தலையில் தட்ட, அது நீலவெளிச்சத்தில் நாலு இருபத்தைஞ்சு என்று தன் முகத்தை காட்டியது.

உலர்ந்துபோயிருந்த தொண்டையில் இறங்கிய ஒரு மடக்கு தண்ணீர், பாலைவனத்தில் பெய்த மழையாய்க்குளிர்வித்தது. 'இன்றைக்கு தூக்கம் அவ்வளவுதான்..' நினைத்தபடி கலைந்த கூந்தலை சரிசெய்துகொண்டு பால்கனியில் வந்து நின்றாள். இன்னும் பவளமல்லி வாசம் அலையடித்துக்கொண்டிருப்பதாய் பட்டது. கனவில் வந்த அந்தப்பெண்ணின் உருவமும் அது உடுத்தியிருந்த பச்சைப்பட்டும் இப்போதும் மங்கலாக நினைவிருந்தன.  எல்லா நினைவுகளையும் ஒரு தலையசைப்பில் உதறிவிட்டு, குளிக்கச்சென்றாள்.

விடிந்தும் விடியாத அன்றைய காலைப்பொழுதில் போன் வந்தது. வெளி நாட்டிலிருக்கும் அவரது அண்ணாதான் பேசினார். 'அப்பாவோட வருடாந்திர திதிக்கு வரமுடியவில்லையாம். பயண ஏற்பாடுகள் ஒன்றும் நினைத்தபடி நடக்கவில்லையாம். அவரது இடத்திலிருந்து இவர்தான் எல்லாவற்றையும் செய்யவேண்டுமாம்...' இருவரும் பேசிக்கொண்டதிலிருந்தே சுருக்கமாக விஷயத்தை புரிந்துகொண்டாள்..

"வருஷத்துக்கொருதடவை.. அதுக்குகூட வரமுடியலை துரைக்கு.."அவள் முணுமுணுப்பதை கேட்டும் கேளாமல், "ஆபீஸ்ல மகேந்திரன் சார்கிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணனும்.." என்று சொல்லிவிட்டு கிளம்பியவர் மதியத்துக்கு மேல் போன் செய்தார்.

" இங்கே பக்கத்துல ஒரு கோயில் இருக்காம். ஆனானப்பட்ட ராமரே தன்னோட தகப்பனுக்கு திதி கொடுத்த இடமாம். இங்கே செய்யறது புண்ணியம்ன்னு பேசிக்கிட்டிருக்கச்சே சொன்னாரு.. போயிட்டு வரலாமா?.."

" நாம என்ன செய்யவேண்டியிருக்கும்ன்னு கேட்டுக்கோங்க.. தகுந்த ஏற்பாடுகளோட போகணும் இல்லியா.."

"அனேகமா எல்லாமே அவங்க செஞ்சுடுவாங்களாம். காலைல ஏழு ஏழரைக்கெல்லாம் அங்க இருக்கணுமாம். ஒண்ணு செய்யலாம். முதல் நாளே கிளம்பி போயிடலாம். தங்குறதுக்கு கோயில்வளாகத்துலயே வசதியான அறைகள் இருக்குதாம்..."

திட்டமிட்டபடி கிளம்பிவந்து இதோ அறைக்குள் நுழைந்தாயிற்று. நல்ல பெரிய கோவில்தான். ' ட் 'டை திருப்பிப்போட்ட வடிவத்தில்,  நடுவில் கோயிலும், ஒரு பக்கமாக நாலைந்து அறைகளும்.. மறுபக்கத்தில் ஆபீஸும் , இன்னொரு சிறிய அறையும் இருந்தன. சிறிய அறையிலிருந்த வயதான தம்பதியை இவர்களுக்கு அறிமுகப்படுத்தி , காப்பி, டிபன் எல்லாம் அவர்களே தருவார்கள் என்று சொல்லிவிட்டு கடமை முடிந்ததென்று கோயில் ஊழியர் சென்றுவிட்டார்.

பளிச்சென்று இருந்த அந்தப்பெண்மணியை பார்த்ததுமே அவளுக்கு பிடித்துவிட்டது. கோயிலிலேயே தங்கியிருந்து சேவை செய்கிறார்களாம். சொல்லிக்கொள்ளவென்று வேறு யாருமில்லையாம்.பரஸ்பரம் அறிமுகப்படுத்திக்கொள்ளும்போது சாரதாம்மா சொன்னதும் சினேகமாக சிரித்துவிட்டு அறைக்குள் சென்றாள்.  நகரின் பரபரப்பு தன்னை தொட்டுவிடாத தூரத்திலிருந்த கோயிலில் நிலவிய அமைதியான சூழ்நிலையும், சாரதாம்மாவின் உபசரிப்பும் ரொம்பவும் பிடித்துப்போய்விட, 'இன்னும் ரெண்டு நாள் தங்கிட்டுப்போகலாமே' என்று அவள் கேட்டபோது அவரால் மறுக்கமுடியவில்லை.

வெளியே சுற்றிய நேரம்போக, மீதியிருக்கும் நேரங்களில் சாரதாம்மாவுடன் பேசிக்கொண்டிருப்பது அவளுக்கு மனதுக்கு இதமாக இருந்தது. நகரங்களில்தான் முகம் கொடுத்துப்பேசக்கூட நேரமில்லாதபடி மனிதர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்களே.. காப்பியை உறிஞ்சிக்கொண்டே இரண்டுபேரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

"உங்களுக்கு ரொம்ப சிரமம் கொடுக்கிறேன்ம்மா.."

"இதிலென்ன சிரமம். என்னோட புள்ளையும், மருமகளுமாயிருந்தா செய்ய மாட்டேனா!!.. இதுக்காவது எனக்கு கொடுப்பினை இருக்கே. அதை நெனைச்சு சந்தோஷம்தான்."

இந்தவயதிலும் ,அங்கே தங்கும் யாத்திரீகர்களுக்கு வேண்டியதை சமைத்துப்போட்டுக்கொண்டு, அவர்களுடைய தேவைகளை கவனித்து பூர்த்தி செய்துகொண்டு ரொம்பவே சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தார்.  'ஓய்வெடுக்கவேண்டிய இந்த வயதில் இங்கே, இப்படி உழைக்கிறாரே.. பிள்ளைகள் சரியில்லை போலிருக்கிறது'.. புதிதாக அறிமுகமானவரிடம் இதையெல்லாம் எப்படி பேசுவது என்று சங்கடப்பட்டாலும், அவரது நிலையை தெரிந்துகொள்ளும் ஆவலில் கேட்டே விட்டாள்..

கண்கள் லேசாக இடுங்க, சின்ன சிரிப்புடன் அவளைப்பார்த்தார், "இதுல என் குழந்தைகளோட தப்பு எதுவுமில்லம்மா.. ஏன்னா, எங்களுக்கு குழந்தைகளே கிடையாது. எனக்கு அவரும், அவருக்கு நானும்ன்னே வாழ்ந்துட்டோம்.. ரெண்டுபேரும் ரிட்டயர் ஆனப்புறம், கோவில்களை தரிசனம் செய்யலாம்ன்னு தேசாந்திரம் கிளம்பினோம். இந்தக்கோயிலைப்பார்த்ததும் அதென்னவோ எங்களுக்கு இதான் எங்க இடம்ன்னு தோணிப்போச்சு. அம்பாளுக்கும், வர்றவங்களுக்கும் சேவை செய்துட்டே இங்கியே காலத்தை முடிச்சுப்போம்ன்னு இங்கியே தங்கிட்டோம் அவ்ளோதான்.. அந்தக்காலத்துல வானப்ரஸ்தம் போவாங்களாமே அதுமாதிரிதான்னு வெச்சுக்கோயேன்..."

"இங்க உங்களுக்கு எல்லாம் வசதியா இருக்காம்மா?.."  நேரடியாக கேட்கத்திணறினாலும் சாரதாம்மா புரிந்து கொண்டார்." ஒண்ணும் பிரச்சினையில்லைம்மா.. அவரோட பென்ஷன் வருது. உங்களை மாதிரி வர்றவங்க இஷ்டப்பட்டு கொடுக்கிறதும் உண்டு. கோயில்லேர்ந்து ஏதோ கொஞ்சம் கொடுக்கிறாங்க.. இதுபோதும்.." என்று சொல்லிக்கொண்டே புடவை மடிப்பை நீவிவிட்டுக் கொண்டார்.

அங்கிருந்து கிளம்பும்போது ஏனோ அவளுக்கு பிறந்த வீட்டிலிருந்து புறப்படுவதுபோல் தோன்றியது. கோயிலின் உள்ளே கற்சிலையாக இருந்த அம்பாள் உடலெடுத்து தன்னுடன் இருந்ததைப்போல் ஒரு மனநிறைவு. 'போயிட்டு வரேம்மா' என்று சாரதாம்மாவிடம் விடைபெற்றபோது ஏனோ தொண்டையை அடைத்தது. 'இரு.. வரேன்' என்றுவிட்டு குடுகுடுவென ஓடிய சாரதாம்மா, தாம்பூலத்துடன் திரும்பி வந்து வழியனுப்பி வைத்தார். பெற்றுக்கொண்டு நமஸ்கரித்தபோது தன் அன்னையை நமஸ்கரிப்பதுபோல் இருந்தது அவளுக்கு. தன்னுடைய விசிட்டிங் கார்டை கொடுத்து விட்டு, ' எப்ப என்ன வேணும்ன்னாலும் என்னைக்கூப்பிடுங்க' என்றுவிட்டு விடைபெற்றாள்.

பனிக்காலம் ஆரம்பமாகியிருந்த ஒரு பொழுது.. வழக்கம்போல் நடைப்பயிற்சிக்கு புறப்பட்டவளுக்கு, இன்று ஏனோ ரொம்ப நேரம் நடக்க வேண்டும்போல் இருந்தது. ஆகவே, அன்றைக்கு புல்வெளியில் நடப்பதை விடுத்து, பூங்காவின் வெளிவட்டத்திலிருந்த ஜாகிங் ட்ராக்கில் நடக்கலானாள். மூலையில் பராமரிப்புப்பணிக்கான பொருட்களை போட்டு வைக்கும் அறையைச் சுற்றிக்கொண்டு போகும், அந்தப்பாதை தூரம் கொஞ்சம் அதிகம்தான்.

வானத்துக்கும் பூமிக்குமாய் கொசுவலை விரித்தது போல் மெல்லிய பனி பரவி நின்றது.  மேலாக ஒரு ஷாலைப் போர்த்திக்கொண்டு விடிகாலை இளங்குளிரை அனுபவித்தபடி மெதுநடை போட்டுக்கொண்டிருந்தவள்,.. அதை ரசித்தபடியே கட்டிடத்தின் பின்பக்கம் வந்தாள்..

கம்மென்று காற்றில் மிதந்து வந்து மோதிய பவளமல்லியின் வாசத்தை, முழுவதும் உள்வாங்கிக் கொள்வது போல் ஒரு நீண்டமூச்சை இழுத்து,  அப்படியே ஒரு நிமிடம் அதை அனுபவித்தபடி கண்மூடி நின்று கொண்டிருந்தாள்.. சிவப்பும் வெள்ளையுமான பூக்களை கையில் வைத்துக்கொண்டு பார்த்துக் கொண்டிருந்தபோதுதான்,  'இங்கேதான் இருக்கியா..'  பின்பக்கமிருந்து ஒரு பெண்குரல் கேட்டது.

அட!!.. சாரதாம்மா.. இங்கே எப்படி??.. அவள் கண்களை அவளாலேயே நம்ப முடியவில்லை.சந்தோஷத்தில் மனம் திக்குமுக்காடியது.

"தனியாவா வந்தீங்க.. வாங்க வீட்டுக்கு போலாம்.."

"உன்னைப் பார்க்கணும்போல் இருந்தது. அதான் கிளம்பிட்டேன், மாமா வண்டிலேதான் உக்காந்திருக்கார். நடக்க முடியாதில்லையா??.."

"ஏம்மா.. பால்பாக்கெட்டை உங்கிட்டயே கொடுத்துடவா?? எனக்கு அலைச்சல் மிச்சம் பாரு.." பால்காரப்பையனின் குரல் அவளை இடைமறித்தது. "ஒரு நிமிஷம்மா.." என்றுவிட்டு, ட்ராக்கை விட்டிறங்கி பூங்காவின் காம்பவுண்ட் சுவரில் அவன் வைத்துச்சென்ற பாக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு, "உழைக்க வேண்டிய வயசுல சோம்பேறித்தனத்தை பார்த்தீங்களாம்மா.." என்றபடியே திரும்பினாள்.

அவளையும், அவளைப்போன்று நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த ஒரு சிலரையும் தவிர பூங்கா வெறிச்சோடிக்கிடந்தது. அங்குமிங்கும் ஓடிச்சென்று பார்த்தாள்.. சாரதாம்மாவைக் காணவில்லை. அவர் வந்ததும், மறைந்ததும் புதிராகவும், குழப்பமாகவும் இருந்தது அவளுக்கு. என்ன செய்வதென்றறியாமல், கைப்பேசியில் இருந்த கோயிலின் ஆபீஸ் நம்பருக்கு போன்செய்தாள்.

"சாரதாம்மாவா!!.. அவங்க அங்க வந்திருக்க முடியாதுங்க.. போனவாரம்தான், மாமா காலமானார். அந்த அதிர்ச்சியிலேயே மாமியும் போயிட்டாங்க.."

46 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சுவையான சிறுகதை வாழ்த்துக்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

//////(உதா. பன்னிகுட்டி, கோமாளி, அஞ்சா சிங்கம், ரொம்ப நல்லவன்.. பட்டாபட்டி.. டெரர்.. சேட்டைக்காரன்.. ஓட்டவடை)///////

என்ன இது தெரிந்து கொள்ள கவி‌தை வீதி வாங்க...

சக்தி கல்வி மையம் said...

அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..
வாழ்த்துக்கள்....

raji said...

பவள மல்லியின் வாசம் போன்று நறுமணம்
நிறைந்த சிறுகதை

சிறுகதையின் ஆரம்பத்தில் போட்டிருக்கும்
பவளமல்லியின் புகைப்படம் மிக அருமை.கைகளில்
அள்ளிக் கொள்ள வேண்டும் போல் ஆர்வம் உந்துகிறது

நல்ல பதிவு.பகிர்வுக்கு நன்றி

sathishsangkavi.blogspot.com said...

நிறைவான பதிவு...

எல் கே said...

நமக்குப் பிரியமானவர்கள் இறப்பின் பொழுது நாம் அருகில் இல்லாவிட்டாலும், இப்படி எதாவது நடந்து நமக்கு குறிப்பாய் உணர்த்தும் என்றுக் கேள்விப் பட்டிருக்கிறேன். நல்ல நடை சாரல்

//வானத்துக்கும் பூமிக்குமாய் கொசுவலை விரித்ததுபோல் மெல்லிய பனி பரவி நின்றது//

வார்த்தைகளின் உபயோகம் அருமை

Asiya Omar said...

மிக அருமை,நல்ல கருத்துடன் சொல்லப்பட்ட கதை.எழுத்து நடையும் சூப்பர்.பார்த்தமட்டில் பூவின் வாசம் நாசியை துளைக்கிறது.

Chitra said...

அந்த படமே கவிதையாய் இருக்கிறது. பதிவும் அருமை.

Thenammai Lakshmanan said...

கார்த்திக் சொன்னது உண்மைதான் . இதுபோல் ஏதாவது காட்டிக் கொடுத்துவிடும்.. நல்ல பகிர்வு சாந்தி

ஸாதிகா said...

கதையும்,படமும் கருத்தைக்கவர்ந்தன.

MANO நாஞ்சில் மனோ said...

பகிர்வு நல்லா இருக்குங்கோ...

ADHI VENKAT said...

அருமையாய் இருந்தது கதை. நல்ல எழுத்து நடை. ராஜி சொல்வது போல் பவளமல்லியின் படம் பார்த்தாலே அவ்வளவு அழகாக இருக்கிறது.

சுந்தரா said...

அருமையான கதை சாரல்.

பிடித்தமானவர்களுக்கு இதுமாதிரி அறிகுறிகள் தென்படுமென்று நானும் சொல்லக்கேட்டிருக்கிறேன்.

கோமதி அரசு said...

மனதை நெகிழவைத்த கதை.

இங்கேதான் இருக்கியா காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

அருமையான கதை அமைதிசசாரல்.

பவளமல்லி படம் அழகு.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

கதை நல்லா இருந்ததுங்க.. ஆனா... ஒரே ஒரே பீலிங்க்ஸ் போங்க..

அந்த சாரதாம்மா இவங்களோட.. இருந்து போயிருக்கலாம்.. :(

அருமையா இருக்கு.. பவளமல்லி படம்.. :)

வெங்கட் நாகராஜ் said...

நல்ல நடையோடு படிப்பவர்களை கட்டிப் போட்டமாதிரி ஒரு பிடிப்பு கதையில். மனதை நெகிழச் செய்தது. பவழமல்லி, பவளமல்லி இரண்டில் எது சரி?

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அழகான கதைங்க... என்னமோ இன்னொரு வாட்டி படிச்சேன்... புரியாததால இல்ல... புடிச்சதால... நன்றி...

தெய்வசுகந்தி said...

அருமையான கதைங்க!!!

vanathy said...

நல்லா இருக்கு சிறுகதை. எனக்கும் என் பாட்டியின் நினைவுகள் இப்படி அடிக்கடி வரும்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சௌந்தர்,

நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வேடந்தாங்கல்-கருன்,

நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சசிகுமார்,

நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜி,

எல்லா கிரெடிட்டையும் பவளமல்லியே அள்ளிட்டு போயிடுச்சுப்பா :-))). மயக்கற வாசனை இல்லியா..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சங்கவி,

ரொம்ப நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

கதையின் ஒன்லைனும் அதுதான் :-))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆசியா,

பார்க்கிறதுக்கும், சுவாசிக்கிறதுக்கும் நல்லா இருக்கிற பூக்களில் ஒண்ணு இல்லியா.. பூ வாசம் எல்லாரையும் கவர்ந்துடுச்சுப்பா :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சித்ரா,

ரொம்ப நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தேனம்மை,

இறப்பதற்கு முன்போ பின்போ சம்பந்தப்பட்டவர்களே வித்தியாசமா நடந்துப்பாங்கன்னும் கேள்விப்பட்டிருக்கேன்..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸாதிகா,

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மனோ,

நன்றிங்கோ :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோவை2தில்லி,

பூ ரொம்ப பிடிச்சுப்போச்சுப்பா எல்லோருக்கும் :-)))).

சின்னக்கிண்ணத்துல தண்ணீர் நிரப்பி அதுல கொஞ்சம் பூக்களை நிரப்பி வீட்டு ஹால்ல வெச்சிருப்பேன். பார்க்கிறதுக்கும் அழகாயிருக்கும் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சுந்தரா,

அதேதாங்க :-)))))

Anisha Yunus said...

azagaana kathai, manathu muzuthum pavalamalli vaasam veesa vaiththathu unmai akkaa. :)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோமதிம்மா,

ரொம்ப நன்றிம்மா..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆனந்தி,

அம்பாள் மடியில கடைசிக்காலத்த கழிக்கணும்ன்னு நெனைச்சவங்க, இங்க வந்து தங்குவாங்களான்னு தெரியலீங்களே :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

எப்படி எழுதினாலும் வாசனையா இருக்கும் :-)))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அப்பாவி,

ரெண்டாவது தடவை படிச்சதுக்கு நல்லவேளையா காரணம் சொன்னீங்க.. இல்லைன்னா,












இன்னும் சிரிச்சிருப்பேன் :-))))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தெய்வசுகந்தி,

ரொம்ப நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வானதி,

நமக்கு பிரியப்பட்டவங்களை அவ்வளவு சீக்கிரத்துல மறக்கமுடியாதுங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அன்னு,

சாரதாம்மாவும் அப்படி ஒரு வாசனையா நிலைச்சு நிற்பாங்கன்னுதான் நானும் சொல்லவந்தேன்.. ரசிச்சதுக்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

நல்ல கதை சாரல்.

/கம்மென்று காற்றில் மிதந்து வந்து மோதிய பவளமல்லியின் வாசத்தை, முழுவதும் உள்வாங்கிக்கொள்வதுபோல் ஒரு நீண்டமூச்சை இழுத்து, அப்படியே ஒரு நிமிடம் அதை அனுபவித்தபடி கண்மூடி நின்று கொண்டிருந்தாள்.. சிவப்பும் வெள்ளையுமான பூக்களை கையில் வைத்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தபோதுதான்,//

வாசகர்களையும் வாசத்தை உணரச் செய்யும் வகையான எழுத்து நடை வெகு நன்று.

Mukil said...

கதை மாதிரியே தெரியல.... ஏதோ நிஜத்துல நடந்த மாதிரி, மனசுலயே நிக்குது. ரொம்ப அருமையா இருக்கு. கலக்கிட்டீங்க அக்கா! :-)

-முகில்

வல்லிசிம்ஹன் said...

ரொம்ப அழகா பவளமல்லியின் மென்மையோட கதை நகர்ந்திருக்கிறது.
ஒரு அம்மாவின் திதி இன்னோரு அம்மாவின் அன்பில முடிந்திருக்கிறது.
பிசிறில்லாஅமல் தொடுத்து இருக்கிறீர்கள் சாரல்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

மிக்க நன்றி :-)))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முகிலு,

நன்றிப்பா..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

ஒருத்தரிடமிருந்து இன்னொருத்தருக்கு தொடர்வதால் அன்பும் ஒரு தொடர்கதைதானேம்மா :-))

LinkWithin

Related Posts with Thumbnails