Tuesday 9 November 2010

படங்களுடன் பின்னூட்டலாம்...

இடுகைகளில் படங்களை இணைப்பதுபோல் கமெண்டுகளிலும் இணைக்கமுடிஞ்சா எவ்ளோ நல்லாருக்கும்ன்னு நினைச்சதுண்டு. அதுக்கு என்னவழின்னு வலைமேஞ்சுக்கிட்டிருந்தப்பதான்,.. அனிமேஷன் படங்களையும் கண்டுகொண்டேன். ஜாக்பாட் அடிச்ச மகிழ்ச்சியில்,.. அதை இடுகைகளில் எப்படி இணைப்பது என்பதை தோண்டித்துருவி கண்டுபிடிச்சு, அதை இடுகைகளிலும் வெள்ளோட்டம் விட்டுப்பார்த்தபின்,.. உங்களிடமும் பகிர்ந்துக்கிட்டேன்.. நமக்குத்தெரிஞ்சதை, நம்ம நண்பர்கள்கிட்ட பகிர்ந்துக்கிற மகிழ்ச்சியே தனிதான்.. அவங்களுக்கும் பிரயோசனப்படுமில்லையா..

அப்புறம், 'கமெண்டுகளில் படங்களை இணைப்பது எப்படி?' என்ற ப்ரொஜக்டை மறுபடியும் ஆரம்பிச்சு, வெற்றிகரமாக தோல்வியடைஞ்சபின்னாடி, சீச்சி..!!! இந்தப்பழம் புளிக்கும்ன்னு ஒதுங்கி வந்துட்டேன். பின்னே என்னங்க... கமெண்டுகளில் படங்களை இணைக்க ஆலோசனை கேட்டா.. ப்ளாக்கரும், கூகிளண்ணனும் சேர்ந்து கூட்டுச்சதி செஞ்சு, இடுகைகளில் எப்படி இணைப்பது ன்னு ஆலோசனை தர்றாங்க. எல்ல்ல்லாம்!!!!...... நாம ரொம்ப வெவரமாகிடுவோம்ன்னு ஒரு மூணெழுத்து ஆமை அவங்களை ஆட்டிப்படைக்குது :-))). ஒண்ணும் சொல்றதுக்கில்லை!!.. என்னோட அடுத்த ப்ரொஜக்டையும் இப்படித்தான் கெழக்கே, மேக்கேன்னு சுத்தி வடக்கால கொண்டு போயி விட்டுக்கிட்டிருக்காங்க... இருக்கட்டும், இருக்கட்டும்...

தீவாளி சமயம், கிடைச்ச சொற்ப இடைவேளையில் தமிழ்மணத்தை நுகர்ந்துக்கிட்டிருந்தப்ப சகோதரர் நீச்சல்காரனின் இந்த இடுகையை தலைப்பை பார்த்துட்டு,  நிதானமா வந்து பார்க்கலாம்ன்னு நினைச்சதை கடைசியில் மறந்தே போயிட்டேன்..   நம்ம வசந்தின் இந்த இடுகையை பார்த்ததும்,..கை நழுவிப்போன புதையல் மறுபடியும் கிடைச்சமாதிரி இருந்தது. உங்க இடுகைகளிலும் இதை ரொம்ப சுலபமா வரச்செய்யலாம்..

அதுக்கு மொதல்ல டேஷ்போர்டுல இருக்கிற designs பகுதிக்குப்போய், அப்புறம் edit html-ஐ திறந்துகொள்ளுங்கள். அங்கே, ctrl+f கொடுத்து வரும் தேடுதல் பெட்டியில் body ன்னு டைப் செஞ்சு அதைக்கண்டுபிடியுங்க. அதுக்கு மேலே, கொடுக்கப்பட்டிருக்கும் ஜாவா ஸ்கிரிப்டை காப்பியடிச்சு ஒட்டுங்க. அப்புறம், உங்க டெம்ப்ளேட்டை சேமியுங்க.. அவ்வளவுதான். இப்போ, யாராவது உங்களுக்கு படங்களுடன் கூடிய கமெண்ட் போட்டா, பின்னூட்டப்பகுதியில் தெரியும். உங்க வலைப்பூவிலும் இந்த வசதியை கொண்டுவரணும்ன்னா, நீச்சல்காரனின் அந்தப்பதிவை ஒரு எட்டு பார்த்துட்டு வாங்க.


 பின்னூட்டத்தில் எப்படி படங்களை இணைப்பது???

1.[im]படத்தின் உரல்[/im]


உங்க நண்பர்களுக்கு இப்படி பிறந்தநாள் வாழ்த்து சொல்லலாம்..

[im]http://c1.ac-images.myspacecdn.com/images02/106/l_56a4ba598b8b496f95c1cdf3d85a796c.jpg[/im]

2. உங்க நண்பர்களுக்கு நன்றி சொல்லலாம்..



இன்னும், நீங்க கொடுக்கும் பின்னூட்டங்கள் ஓடும் எழுத்துக்களில் வர விரும்பினால்,

[ma]write the text[/ma].

இதில் write the text என்று கொடுக்கப்பட்ட இடத்தில், நீங்க எழுத விரும்புறதை எழுதலாம்.. இதில் படங்களை ஓடவைக்கணும்ன்னா,.. [ma]படங்களுக்கான உரல்[/ma].

அதேமாதிரி, எழுத்தின் அளவு, மற்றும் நிறத்தையும் விரும்பியமாதிரி மாத்திக்கவும் தனித்தனி tags இருக்கு.

எழுத்தின் அளவை மாத்தணும்ன்னா, [si="2"]...[/si] இந்த tag-ல் கொடுக்கப்பட்ட எண்ணை மாத்திக்கலாம்.

எழுத்தின் நிறத்தை மாத்தணும்ன்னா[co="red"]...[/co] இந்த tag-ல் red-க்கு பதிலா, நீங்க விரும்பிய நிறத்தை டைப் செஞ்சுக்கலாம்.

கொடுக்கப்பட்ட tagsஉடன் விரும்பிய tagsஐ கலந்தும் விரும்பிய விளைவுகளை கொண்டுவரலாம். உதாரணமா, [si="3"][co="green"]வெள்ளோட்டம்[/co][/si]

இனிமே, நீங்க யாருக்காவது அவார்ட் கொடுக்கிறதாயிருந்தா, பின்னூட்டத்துலயே போயி கொடுக்கலாம். நீங்க கொடுக்கும் அவார்டின் உரலியை மட்டும் வெட்டி ஒட்டினாப்போதும். வலைப்பூவின் உரலை வெட்டி ஒட்டிக்கிட்டு கஷ்டப்பட வேண்டியதில்லை. ஜாவா தடை செய்யப்படாத எல்லா ப்ரௌசர்களிலும் இது வேலை செய்யும்ன்னு நீச்சல்காரர் சொல்லியிருக்கார். மேலதிக விவரங்களுக்கு அவங்களோட வலைப்பூவிலும்  போயி பார்த்துக்கலாம்.


இந்த தகவல்களை பகிர்ந்துக்கிட அனுமதியளிச்ச சகோதரர் நீச்சல்காரருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி. 

டிஸ்கி:  உங்க வலைப்பூவிலும் இந்த வசதி செஞ்சுட்டீங்கன்னா,.. வாசகர்களுக்கு ஒரு வார்த்தை போஸ்ட் போட்டு சொல்லிடுங்க.. இல்லைன்னா, பின்னூட்டப்பொட்டிக்கு மேல்பக்கம் குறிப்பு எழுதியாவது தெரியப்படுத்திடுங்க. பின்னூட்டம் போட வசதியா இருக்குமில்ல :-)












30 comments:

சாந்தி மாரியப்பன் said...

[si="3"][co="green"]வெள்ளோட்டம்[/co][/si]

சாந்தி மாரியப்பன் said...

[co="purple"][ma]ய்யாஹ்ஹூ[/ma][/co]

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. முயற்சி செய்து பார்க்கிறேன். நன்றி.

ப்ரியமுடன் வசந்த் said...

[si="10"][co="violet"][ma]ஜிமெயில்[/ma][/co][/si]

ப்ரியமுடன் வசந்த் said...

[im]http://static.baseballtoaster.com/blogs/u/bronxbanter/2008/927/0003/Rain_640.gif[/im]

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு அமைதிச்சாரல்!

வசந்தின் பின்னூட்டப் படங்கள் தூள் கிளப்புகின்றனவே:)!

நசரேயன் said...

உள்ளேன் அம்மா

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஏதேது.. இனி மொழி அவசியமில்ல போலயே ;)

அருண் பிரசாத் said...

நல்ல பகிர்வு....

ஆனால் ஒரே பிரச்சனை லோட் ஆக டைம் எடுக்குதுங்க

Chitra said...

Looks cool!

வல்லிசிம்ஹன் said...

Congratulations saaral.:)

Prathap Kumar S. said...

உங்களுக்கு வந்த பின்னுட்டத்தில் எந்த படங்களும் எனக்கு தெரியவில்லை..வெறும் code மட்டுமே தெரிகிறது.....

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நாஞ்சில்,

பின்னூட்டப்பொட்டி இருக்கும் பகுதியில் code மட்டுமே தெரியும். ஆனா, இடுகையுடன் சேர்ந்த பின்னூட்டப்பகுதியில் படங்கள் நன்றாகவே தெரியுது. இதை இடுகைக்கு வந்த பின்னூட்டங்க்ளும் உறுதி செய்கின்றன.

ப்ரௌசரைப்பொறுத்து வித்தியாசப்படுதோ என்னவோ..

அம்பிகா said...

நல்ல பகிர்வு. நன்றிங்க.

ஜெய்லானி said...

@@ நாஞ்சில் பிரதாப்™ --//

உங்களுக்கு வந்த பின்னுட்டத்தில் எந்த படங்களும் எனக்கு தெரியவில்லை..வெறும் code மட்டுமே தெரிகிறது.....//

ரிப்பீடேஏஏஏஏஎய்ய்ய்ய்ய்ய்ய்

Anonymous said...

good post.. thanks... but how do the readers know how to type the comments.. can we put the instructions, just above the comment form?... is that possible??

ஹேமா said...

எல்லாரும் கலக்கப்போறாங்க.நானும் முயற்சி செய்து பாக்கிறேன் சாரல் !

Unknown said...

என் நீண்ட நாள் விருப்பம், பின்னூட்டத்தில படங்காட்டறது, காட்டிக் கொடுத்ததற்கு நன்றி!

Chrome, Firefox இவற்றில் இது வேலை செய்கிறது, IE (explorer) இல் வேலை செய்யவில்லை, அப்படியே தெரிகிறது. காட்டிக் கொடுத்த அமைதிச் சாரலுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ப்ரேம்குமார்,

சிம்பிள் மேட்டர்தான்.. கொடுக்கப்பட்டிருக்கும் tagsக்கு நடுவில் நீங்க எழுத விரும்புறதையோ, அல்லது படத்தின் உரலையோ கொடுக்கவேண்டும், அவ்வளவுதான்.. இடுகையில் தெளிவா சொல்லியிருக்கிறதாத்தான் நினைக்கிறேன்.எதுக்கும் அதை அப்படியே காப்பிசெஞ்சு பின்னூட்டமிட்டுப்பாருங்க. நல்லாப்புரியும்.

[co="blue"][ma]நன்றி.. நன்றி.. நன்றி[/ma][/co]

சாந்தி மாரியப்பன் said...

ப்ரேம்குமார்,

இன்னொண்ணு சொல்ல விட்டுப்போச்சு.. உங்க பதிவில் இந்த வசதி இருக்குன்னு, உங்க பின்னூட்டப்பெட்டியில் மேல்பக்கம்
குறிப்பு கொடுத்து வெச்சீங்கன்னா, கண்டிப்பா.. படிக்கிறவங்களுக்கு கமெண்ட் போட வசதியா இருக்கும். இதை இடுகையில் சொல்ல எப்படியோ விட்டுப்போச்சு. ரெண்டுவரி இப்ப சேர்த்துட்டேன்.. ஞாபகப்படுத்தினதுக்கு நன்றி.

நீச்சல்காரன் said...

தகவலைப் பகிர்ந்துக் கொண்டு மிக்க நன்றி சகோ


@ ஜெய்லானி
@ நாஞ்சில் பிரதாப்™ --
இப்போது கொஞ்சம் சில மாற்றங்களை செய்து இன்றையப் பதிவில் சோதித்துக் கொண்டிருக்கிறேன். முடிந்தால் Interner explorer பிரச்சனை தீரலாம்.

ஜெயந்தி said...

தீபாவளிக்கு வேலை செய்யவே நேரம் போதாமல் இருக்குறோம். உங்களுக்கு இந்த வேலையெல்லாம் வேற நடந்துச்சா?

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,
உங்க முயற்சிக்கு பாராட்டுக்கள்.

வாங்க வெங்கட் நாகராஜ்,
முயற்சி செஞ்சுட்டு சொல்லுங்க.

வாங்க வசந்த்,
முதல்படம் என் ஃபேவரிட்...

வாங்க ராமலஷ்மி,
அதான் வசந்த் :-)

வாங்க நசரேயன்,
வாங்க.. வாங்க.

வாங்க முத்துலெட்சுமி,
ஓராயிரம் வார்த்தைகள் சொல்வதை ஒரு படம் சொல்லிடும்ன்னு சும்மாவா சொன்னாங்க :-)

வாங்க அருண்பிரசாத்,
இருக்கலாம்..

வாங்க சித்ரா,
வாங்க வல்லிம்மா,

வாங்க ஜெய்லானி,
வாங்க அம்பிகா,

வாங்க ஹேமா,
முயற்சி செஞ்சுட்டு சொல்லுங்க..

வாங்க கெக்கே பிக்குணி,
முதல் தடவை வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன்.

வாங்க நீச்சல்காரன்,

வாங்க ஜெயந்தி,
அதுபாட்டுக்கு அது.. இதுபாட்டுக்கு இது :-)))


உங்க அனைவருக்கும்

[im]http://3.bp.blogspot.com/_6Ojo3yT26ZA/TKkrLf2g7QI/AAAAAAAAAJI/iBth7Nl8Z6c/s1600/thank_you_comment_graphic_01.gif.jpeg[/im]

சாந்தி மாரியப்பன் said...

[ma][si="7"][co="red"]நன்றி..நன்றி..நன்றி[/co][/si][/ma]

[im]http://www.myspacegraphics24.com/graphics/flowers/flowers32.jpg[/ma]

சாந்தி மாரியப்பன் said...

[im]http://www.myspacegraphics24.com/graphics/flowers/flowers32.jpg[/im]

ஆனந்தி.. said...

Superb!Superb!))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆனந்தி,

[ma][im]http://img1.coolspacetricks.com/images/glittertexts/thank_you/406.gif[/im][/ma]

Unknown said...

:)good one

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சிவா,

[ma]நன்றி[/ma]

வெற்றிவேல் said...

அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல், நானும் அறிந்து கொண்டேன்...

மிக்க நன்றி

LinkWithin

Related Posts with Thumbnails